ஹோம் /ராமநாதபுரம் /

சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரங்கள் தயார் - ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரங்கள் தயார் - ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram Collector Announced Fertilizer Ready For Samba Cultivation | ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்பா சாகுடிபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கு உரங்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்பா சாகுடிபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க உரங்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் உள்ள மேலாண்மை துறையின் உரக்கிடங்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க ; ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைகளை வறட்சியில் இருந்து பாதுகாப்பது எப்படி?

அப்போது கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளதவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பா பருவ நெல் விதைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 312.7 மீ.மி மழை பெய்துள்ளது. இம்மழையினை கொண்டு விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 31 ஆயிரத்து 36 ஹெக்டர் வரை பயிர் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு மாதத்திற்கு யூரியா 4,695 மெ.டன் ஒதுக்கீடு பெறப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் கிரிப்கோ யூரியா 1,500 மெ.டன் ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 373.5 மெ.டன் கிரிப்கோ யூரியா கொண்டுவரப்பட்டது,

மேலும் தற்போது 30 மெ.டன் வரப்பெற்றுள்ளது. இதன் மூலம் 1579 மெ.டன் யூரியா, 1729 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 118 மெ.டன் பொட்டாஷ், 2570 மெ.டன் காம்ப்ளஸ், 50 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் என மேற்கண்ட உரவகைகள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ; ராமநாதபுரத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உரங்கள் விவரங்கள் தெரியுமா?

எனவே விவசாயிகளுக்கு எந்தவித உரத்தட்டுப்பாடு இன்றி நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான உரங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி வேளாண் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா, வேளாண்மை உதவி இயக்குனர் நாக ராஜன், ராமநாதபுரம் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram