முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் வறட்சி இல்லா மாவட்டமாக மாற வேண்டி பூம்பூம்மாடு நேர்த்திக்கடன்! 

ராமநாதபுரம் வறட்சி இல்லா மாவட்டமாக மாற வேண்டி பூம்பூம்மாடு நேர்த்திக்கடன்! 

X
பூம்பூம்

பூம்பூம் மாடு நேர்த்திக்கடன்

Ramanathapuram news | ராமநாதபுரம் மாவட்டத்தில் நேர்த்திக்கடனாக நடைபெற்ற பூம்பூம்மாடு வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியில்லா மாவட்டமாக மாறவேண்டி சக்கரகோட்டை கிராமத்தில் இருந்து மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் போது நேர்த்திக்கடனுக்காக பூம்பூம்மாடு வீதி உலா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டை கிராமத்தில் இருந்து 20 நபர்கள் மதுரையில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ள சித்திரை திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பூம்பூம் மாட்டினை அழைத்துச் சென்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் முக்கிய பகுதிகளின் வழியாக நாட்டுப்புற பாடல்களைபாடி, மேளதாளத்துடன், ஆடிபாடி ஊர்வலமாக சென்றனர். இதில் அலங்கரிப்பட்ட பூம்பூம்‌மாட்டினை பொதுமக்கள் ஆசிபெற்று வணங்கினர்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியினால் விவசாயம் பாதிப்படைகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதால், நல்ல மழை பெய்து வறட்சி இல்லாத மாவட்டமாக மாற வேண்டும். மேலும் மக்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழவேண்டும் என சித்திரை திருவிழாவிற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, ஏழுநாட்கள் ஊர்வலமாக சென்று அழகர் ஆற்றில் இறங்கும் போது வேண்டுதலை நிறைவு செய்வதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram, Ramnad