ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் குடிநீர் கண்மாய்க்குள் உப்பளம்- எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

ராமநாதபுரத்தில் குடிநீர் கண்மாய்க்குள் உப்பளம்- எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

கிராம

கிராம மக்கள் போராட்டம்

ராமநாதபுரத்தில் ஆனைகுடி கிராம மக்கள் உப்பளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆனைகுடி கண்மாய்க்குள் உப்பளம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்தக் கோரி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே அமைந்துள்ளது ஆனைகுடி கண்மாய். இந்த கண்மாயை நம்பி ஆணைகுடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி பெற்று வருகிறது.

கிராம மக்கள் போராட்டம்

இதையடுத்து, குடிநீர் கண்மாய்க்குள் தனியார் உப்பு நிறுவனம் சார்பில் உப்பளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த உப்பளம் அமைக்கப்பட்டால் ஒட்டுமொத்த கண்மாய் தண்ணீரும் உப்பு நீராக மாறும் அபாயம் ஏற்படும்.

ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகம்

இந்நிலையில், உப்பளம் அமைத்தால் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீர் பெற முடியாத சூழல் ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். கால்நடைகளுக்கு குடிக்ககூட குடிநீர் இல்லாத சூழல் ஏற்படும் நிலை உருவாகும்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்‌.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram