Home /ramanathapuram /

50 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய அக்னி தீர்த்தம் கடற்கரை ; தரை தட்டி நிற்கும் விசைப்படகுகள்

50 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய அக்னி தீர்த்தம் கடற்கரை ; தரை தட்டி நிற்கும் விசைப்படகுகள்

கடல் உள்வாங்கல்

கடல் உள்வாங்கல்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தகடற்கரையில் வழக்கத்தை விட கடல் 50 மீட்டர் உள்வாங்கியுள்ளதால்  அப்பகுதியில் பக்தர்கள் புனித நீராட சிரமத்திற்கு உள்ளாகினர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடற்கரையில் வழக்கத்தை விட கடல் 50 மீட்டர் உள்வாங்கியுள்ளதால் அப்பகுதியில் பக்தர்கள் புனித நீராட சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி நிற்கின்றன‌‌.

தமிழகத்தில் நிலவிவரும் தென்மேற்கு பருவக்காற்றால் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகம் பகுதியில் பலத்த காற்று வீசகிறது. பலத்த காற்று வீசுவதால் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டு அனுமதி சீட்டு வழங்கவில்லை.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், சங்குமால் கடற்கரை, ஓலைகுடா, மீன்பிடி துறைமுகம் கடல் பகுதியில் சுமார் 50 மீட்டருக்கு கடல் உள்வாங்கி உள்ளது.

உள்வாங்கிய கடல்


இதனிடையே ராமேஸ்வரம் வடக்கு மற்றும் தெற்கு கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டு மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகின்றது. இந்தநிலையில் தற்போது ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் உள்வாங்கி காணப்படுகிறது.

உள்வாங்கிய நிலையில் கடல்


கடல் உள்வாங்கி காணப்படுவதால் அப்பகுதியில் அரிய வகை நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள், பவளப்பாறைகள் ஆகியவை வெளியில் தெரிகின்றன. மேலும் கடற்கரை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுபடகுகள் தரைதட்டின நிற்கின்றன.

கடல் உள்வாங்கல்


ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுக பகுதியில் அடிக்கடி கடல் உள் வாங்குவதற்கான காரணம் குறித்து மீனவர்கள் கூறியதாவது, ‘அமாவாசை பௌர்ணமி நாட்களில் அடிக்கடி கடல் உள்வாங்குவது வழக்கமான ஒன்று தான் என்றும், மாலை நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கூறினர்.

இததையடுத்து, கரை ஓரங்களில் நிறுத்தப்படும் நாட்டுப்படகுகள் தரை தட்டி சேதமடைவதால் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவுகளுடன் கூடிய துறைமுகம் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி