முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா.. ராஜா பள்ளி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது..

ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா.. ராஜா பள்ளி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது..

X
ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா

Book Fair : ராமநாதபுரத்தில் 5வது ஆண்டு புத்தக திருவிழா இன்று தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலை இலக்கிய ஆர்வலர்கள் இணைந்து ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 5வது முகவை சங்கம புத்தக திருவிழா கலைநிகழ்ச்சிகளுடன் வெகுவிமர்சையாக தொடங்கப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அனைவரும் புத்தகங்கள் வாசிப்பதை நேசிக்க வைக்கவும் ராமநாதபுரத்தில் 5வது புத்தக திருவிழா இன்று தொடங்கப்பட்டது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு 1000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய ஒரு லட்சம் தலைப்புகளில் உள்ள சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை புத்தக வாசிப்பாளர், மாணவர்கள், பொதுமக்கள் இந்த புத்தக திருவிழாவில் வாங்கி கொள்ள முடியும். புத்தக திருவிழாவின் கூடுதல் சிறப்பாக ஓவியக் கண்காட்சி, பாரம்பரிய உணவு கூடங்கள், மூலிகை கண்காட்சி, அரசின் சாதனைகளை விளக்கும் படக் கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் தமிழ் ஆர்வலர்கள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்துரைகள் வழங்கப்படுகின்றன. கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்கால்குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முகவை சங்கமம் 5வது புத்தக திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram