முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் சீதக்காதி மைதானத்தில் தொடங்கிய காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு

ராமநாதபுரம் சீதக்காதி மைதானத்தில் தொடங்கிய காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு

X
உடல்தகுதித்

உடல்தகுதித் தேர்வு

Ramanathapuram News | இந்த உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கி வருகி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் சீதக்காதி மைதானத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் உடல் திறன் தகுதி தேர்வு தொடங்கியது. 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் சிறைத்துறை ஆகிய துறைகளுக்கு இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண் விண்ணப்பதாரர்களுக்கான உடல் திறன் தகுதி தேர்வு ராமநாதபுரத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.

இந்த உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கி வருகி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 987 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், முதல் நாள் என்பதால் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடைபெற்றது. ராமநாதபுரம் சரக டிஐஜி துரை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இந்த உடற் திறன் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

First published:

Tags: Local News, Ramanathapuram