Home /ramanathapuram /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 27) மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 27) மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள்.!

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District News : ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 27 - வியாழன்) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை சில பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

    தமிழக மின்வாரியம் சார்பில் மின் பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக மின்கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுதுகள் நீக்கப்படுவதுடன், மின்சார லைன் செல்லும் பகுதிகளின் அருகாமையில் உள்ள மரம் செடி கொடிகளை அகற்றி சீரான மின் விநியோகிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 27 - வியாழன்) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் துணை மின்நிலையத்தில்
    மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஜூலை 27ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் இருக்காது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    மேலும், தேவிபட்டிணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள , சித்தாா்கோ தாா்ட்டை, கழனிக்குடி, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம் ஆகிய பகுதிகளில்
    மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை ராமநாதபுரம் உதவிச் செயற்பொறியாளா் ஆா். ஆா் பாலமுருகன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..

    செய்தியாளர்: ராஜீவ்காந்த்.
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி