Home /ramanathapuram /

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் வரலாற்றை பிரதிபலிக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா.. முதல் நாள் - ராவணசம்ஹாரம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் வரலாற்றை பிரதிபலிக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா.. முதல் நாள் - ராவணசம்ஹாரம்

ராவணசம்ஹாரம்

ராவணசம்ஹாரம்

Ramanathapuram District: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் வரலாற்றை பிரதிபலிக்கும் விழாவே ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவாக ஆண்டு தோறும் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    இலங்கையில் ராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்த ராமர், வழியில் வனத்தில் தங்கிய போது, ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவனை வழிபட வேண்டும் என்று முனிவர்கள் கூறினர். சிவ பூஜைக்குரிய லிங்கத்தைக் கொண்டு வர அனுமனிடம் கேட்டுக்கொண்ட ராமர், கடலில் தோஷம் நீங்க நீராடி முடித்தார். சிவலிங்கம் கொண்டு வரச்சென்ற அனுமன் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வழிபட வேண்டும் என்பதால் கடற்கரை மணலில் சீதையால் பிடிக்கப்பட்ட மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    தாமதமாக வந்த அனுமன், சிவலிங்க பூஜை முடிந்ததைக் கண்டு கோபமடைந்தார். அனுமனை சமாதானம் செய்த ராமர், அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை முதலில் வணங்கிய பின், தன்னால் பூஜிக்கப்பட்ட லிங்கத்தை வழிபட வேண்டும் எனக்கூறினார். ராமபிரானால் பூஜிக்கப்பட்ட இந்த லிங்கமே ராமநாதசுவாமியாகவும், ராமர் ஈஸ்வரனை வணங்கியதாலேயே இத்தலத்திற்கு ராமேஸ்வரம் என்ற பெயர் வந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறப்படுகிறது.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் வரலாற்றை பிரதிபலிக்கும் விழாவே ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவாக ஆண்டு தோறும் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று மாலையில் திட்டக்குடி துர்க்கை அம்மன் கோயில் அருகே ராவணசம்ஹாரம் நடைபெற்றது.

    ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமர் லட்சுமணன் ரத வீதி வழியாக வீதி உலா வந்து திட்டக்குடியில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்வில் பத்து தலைக் கொண்ட ராவணன் ராமரை மூன்று முறை வலம் வந்த பின்பு ராமர் தன்னுடைய வேலால் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது,

    இதையடுத்து, வதம் செய்யப்பட்ட வேலுக்கு பால் பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், வேலுக்கும் ராமர் லட்சுமணனுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது, அப்போது கோயில் யானை ராமலெட்சுமி தனது தும்பிக்கையை உயர்த்தி ராமர் லட்சுமணனை வழங்கியது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ராமர் லட்சுமணனுடன் மீண்டும் கோயிலுக்கு சென்றனர், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை கண்டு கொண்ட பின்னர் சாமி தரிசனம் செய்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி