ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தின் கடைக்கோடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்.. மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் பாராட்டு

ராமநாதபுரத்தின் கடைக்கோடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்.. மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் பாராட்டு

நலத்

நலத் திட்ட உதவி வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் கடைக்கோடி கிராமமான குளத்தூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமுக்கு மக்களிடையே அதிக வரவேற்று கிடைத்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Paramakudi, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து தீர்வு கண்டனர்.

இந்நிலையில், பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் கடைக்கோடியில் உள்ள கிராமமான குளத்தூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

நலத் திட்ட உதவி வழங்கல்

இதனையடுத்து, இன்று குளத்தூர் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு குளத்தூர் கிராமத்திற்கு அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நலத் திட்ட உதவி வழங்கல்

மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram