ஹோம் /ராமநாதபுரம் /

மக்கும் - மக்காத குப்பைகளை பிரித்து சேகரிப்பது எப்படி? ராமேஸ்வரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..

மக்கும் - மக்காத குப்பைகளை பிரித்து சேகரிப்பது எப்படி? ராமேஸ்வரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Ramanathapuram latest News | ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை பிரித்து சேகரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகளை பிரித்து சேகரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் “தூய்மையின் இரண்டு வண்ணங்கள்” என்ற தலைப்பில் நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுத்தம் செய்தும் வருகின்றனர்.

  இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தல் பணியில் ஈடுபட்டனர்.

  Must Read : விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

  அதன்படி, ராமேஸ்வரம் நகராட்சி மார்க்கெட் தெரு பகுதியில் தொடங்கி, நகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி மாண-மாணவிகள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர், மார்க்கெட் தெரு, பொன்னப்பபிள்ளை தெரு தினசரி மார்க்கெட், ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  மேலும், ஒவ்வொரு வீடாக சென்று மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை குப்பை கூடைகளில் தனித்தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தனர். அதேபோல, வணிக நிர்வனங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Local News, Ramanathapuram