முகப்பு /ராமநாதபுரம் /

"மதுபான கடைகளை மூடுங்கள்" ராமநாதபுரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

"மதுபான கடைகளை மூடுங்கள்" ராமநாதபுரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

X
மதுபானக்கடைகளை

மதுபானக்கடைகளை மூடக்கோரி போராட்டம்

Ramanathapuram protest | ராமநாதபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன், திருப்புல்லாணி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகளை மூடக்கோரி சிஐடியு மற்றும் பொதுமக்கள் சார்பில் ராமநாதபுரம் மண்டலம் மதுபானக்கடை மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் புகழ்பெற்ற ஆதிஜெகநாதர் பெருமாள் கோவில், பள்ளி, மாணவர்கள் தங்கும் விடுதி, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி, வழிபாட்டு தலங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய பகுதிகளுக்கு அருகே மதுபானக்கடைகள் அமைக்க கூடாது என விதிமுறைகள் இருந்தும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், புனித ஸ்தலமான ராமேஸ்வரம் தீவு பகுதிக்குள் மதுபானக்கடைகள் அமைக்க கூடாது என விதிமுறைகள் இருந்தும் பாம்பனில் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகளை அங்கிருந்து அகற்றகோரி பலமுறை கோரிக்கைகள் வைத்தும் மேலாளர் நடவடிக்கை எடுக்காததால் ராமநாதபுரத்தில் உள்ள மதுபானக்கடை மண்டல மேலாளர் அலுவலகத்தை சிஐடியு மற்றும் பொதுமக்கள் சார்பில் முற்றுகையிட்டு போராட்டமானது நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில், திருப்புல்லாணி, பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிஐடியுடன் இணைந்து கோஷங்களையும், கண்டன முழக்கங்களையும் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Ramanathapuram, Tasmac