முகப்பு /ராமநாதபுரம் /

முதியோர் ஓய்வூதியத்தை முறையாக வழங்ககோரி ராமநாதபுரம்  ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்..!

முதியோர் ஓய்வூதியத்தை முறையாக வழங்ககோரி ராமநாதபுரம்  ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்..!

X
முதியோர்

முதியோர் ஓய்வூதியத்தை முறையாக வழங்ககோரி போராட்டம்

Ramanathapuram District |முதியோர் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்ககோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

முதியோர் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்ககோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்ததால் அங்கேபரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியம் பெற்றுவந்த முதியோர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக முதியவர்களுக்கு ஓய்வூதியமானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, நிபந்தனைகள் இல்லாமல் ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும்.

Read More : விரைவில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சேதி

வழங்கப்படும் ஓய்வூதியம் தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாதம் தோறும் ரூ.6000 என உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முழக்கங்களை எழுப்பி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால்,அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram