முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் சீமானை எதிர்த்து ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரத்தில் சீமானை எதிர்த்து ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

X
ஆதிதமிழர்

ஆதிதமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

Ramanathapuram district | ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு,அருந்ததிய சமூக மக்களை இழிவு படுத்தி பேசியதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு கிழகுத் தொகுதி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர்கட்சி வேட்பாளரை ஆதரித்து, சீமான் பிரச்சாரம் செய்தபோது, அருந்ததியர் சமூகத்தினரை ‘வந்தேறி தெலுங்கர்’ என்று குறிப்பிட்டதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அருந்ததிய சமூக மக்களை இழிவுபடுத்தி பேசியதாகவும் அதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Protest, Ramanathapuram, Seeman