ஹோம் /ராமநாதபுரம் /

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யுங்கள்- ராமேஸ்வரத்தில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி போராட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யுங்கள்- ராமேஸ்வரத்தில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி போராட்டம்

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் போராட்டம்

ராமேஸ்வரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ஆளுநர் பதவியை திரும்பப் பெறுமாறு ராமேஸ்வரம் தாலுகா அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக குடியரசுத் தலைவருக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில் திராவிடம், புதிய கல்விக் கொள்கை, சனாதனம், ஆரியம், பட்டியலின மக்கள், திருக்குறள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தபால் அனுப்பும் போராட்டக்காரர்கள் 

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்து, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

தபால் அனுப்பும் போராட்டக்காரர்கள்

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. ஆளுநருக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பிய பின்பு குடியரசுத் தலைவருக்கு தபால் அனுப்பப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram