ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமநாதபுரத்தில் நாளை தனியார்துறையின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று அம்மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை தேடுபவர்கள், ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை தேடுபவர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பைப் பெறலாம்.

    மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இதில் பதிவு செய்து பயன்பெறலாம்.

    வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை தேடும் நபர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராமநாதபுரம் வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தெரிவித்துள்ளார்.

    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram