Home /ramanathapuram /

ராமேஸ்வரத்தில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம்.. காரணம் இது தான்

ராமேஸ்வரத்தில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம்.. காரணம் இது தான்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - ராமேஸ்வரத்தில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம்..

Rameshwaram Latest News | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தின் பின்புறம்  'தானம்' என்ற அறக்கட்டளையினர் இந்த சுகம் பொது மருத்துவமனையை நிறுவியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Rameswaram
குறைந்த கட்டணத்தில் மற்ற தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தி ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, சுகம் பொது மருத்துவமனை.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தின் பின்புறம்  'தானம்' என்ற அறக்கட்டளையினர் இந்த சுகம் பொது மருத்துவமனையை நிறுவியுள்ளனர்.

2007 ஆம் ஆண்டு தானம் அறக்கட்டளையின் மூலம் பதிவு செய்யப்பட்டு இந்தியா முழுவதும் 19 சுகம் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒடிசா, கர்நாடகம், விசாகப்பட்டினம், தமிழ்நாட்டில், திண்டுக்கல், திருவண்ணாமலை, தேனி, சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் நான்கு இடங்களிலும் மதுரையில் 6 இடங்களில் இம்மருத்துவமனை செயல்படுகிறது.

சுகம் மருத்துவமனை, ராமேஸ்வரம்


ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த மாத இறுதிக்குள் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், நயினார்கோவில், தொண்டி போன்ற இடங்களில் புதிய மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது.

10 வருடங்களுக்கு முன்பு மதுரையில் முதல் மருத்துவமனை அமைக்கப்பட்ட போது ரூ.20 முதல் ரூ.30 வரை மருத்துவர் கட்டணம் வாங்கப்பட்டதாகவும், தற்போது விலைவாசி உயர்வால் அதிகபட்சமாக ரூ.70 வரை வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மருந்துகளுக்கு 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை சலுகை உள்ளது.

சுகம் மருத்துவமனை, ராமேஸ்வரம்


மேலும், இங்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முழு உடல் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை போன்ற பரிசோதனைகளுக்கு 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு கட்டணத்தில் 25 முதல் 30 சதவீதம் கட்டணம் குறைக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றாலே ரூ.500லிருந்து ரூ.1000 வரை மருத்துவர் ஆலோசனை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன் பின்பு மற்ற பரிசோதனை என்று அதற்காகவும் மருந்துகளுக்கும் தனியாக கட்டணம் வாங்கப்படுகிறது. எனவே குறைந்த கட்டணத்தில் சேவை நோக்கில் நடத்தப்படும் சுகம் மருத்துவமனைக்கு ராமேஸ்வரம் பகுதியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி