முகப்பு /ராமநாதபுரம் /

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள்: ராமநாதபுரம் புத்தகத் திருவிழா சிறைத்துறையின் முயற்சி

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள்: ராமநாதபுரம் புத்தகத் திருவிழா சிறைத்துறையின் முயற்சி

X
புத்தகங்கள்

புத்தகங்கள் வழங்கும் பொதுமக்கள்

Ramanathapuram | ராமநாதபுரம் புத்தகத்திருவிழாவில் சிறைவாசிகளுக்காக மக்களிடமிருந்து புத்தங்கள் வாங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகவை சங்கமம் புத்தகத் திருவிழாவில் சிறைத்துறை சார்பில் சிறைவாசிகளின் புத்தக வாசிப்பை மேம்படுத்திட பொதுமக்கள் புத்தகங்களை நன்கொடை வழங்கிட சிறப்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் சிறைவாசிகளுக்கு புத்தகங்களை வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் முகவை சங்கமம் 5-வது புத்தகத் திருவிழா தொடங்கிய நிலையில், புத்தக திருவிழாவில் தமிழ்நாடு சிறைத்துறையினர் சார்பில் சிறைவாசிகளின் புத்தக வாசிப்பை மேம்படுத்த புத்தக நன்கொடை பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறைவாசிகளுக்காக அமைக்கப்பட்ட இந்த பெட்டிகளில் பொதுமக்கள் மற்றும் புத்தக வாசகர்கள் தங்களால் முடிந்த அளவு புத்தகங்களை வழங்கிட வேண்டும் என சிறைத்துறையினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதற்காக வைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டியில் பொதுமக்கள் புத்தகங்களை நன்கொடையாக வழங்கி சிறைவாசிகளை மேம்படுத்திட வேண்டும். இதில் பெறப்படும் புத்தகங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலை நூலகங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என சிறைத்துறை சார்பில் அறிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புத்தகத் திருவிழாவிற்கு வருகை தரும், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், வாசகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறைவாசிகளுக்காக வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் புத்தகங்களை நன்கொடையாக அளித்து செல்கின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram