முகப்பு /ராமநாதபுரம் /

"பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்க வேண்டும்" ராமதநாதபுரத்தில் பூசாரிகள் போராட்டம்!

"பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்க வேண்டும்" ராமதநாதபுரத்தில் பூசாரிகள் போராட்டம்!

X
பூசாரிகள்

பூசாரிகள் போராட்டம்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டமானது நடைபெற்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராமகோவில் பூசாரிகள் பேரவையின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டமானது நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமகோவில் பூசாரிகள் பேரவை, பூகட்டுவோர் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவையினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளாக தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.2000 வழங்கவேண்டும். கிராமகோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி மாத ஊக்கத்தொகையாக ரூ‌.10 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

மேலும், செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராம கோயில் பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி விரைவாக செயல்படுத்த வேண்டும், அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கிராம கோவில் பூசாரிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

First published:

Tags: Local News, Protest, Ramanathapuram