ஹோம் /ராமநாதபுரம் /

டூவீலரில் கணவருடன் சென்றபோது விபத்து.. கால்வாயில் விழுந்து கர்ப்பிணி பெண் பலி... பரமக்குடியில் சோகம்

டூவீலரில் கணவருடன் சென்றபோது விபத்து.. கால்வாயில் விழுந்து கர்ப்பிணி பெண் பலி... பரமக்குடியில் சோகம்

கால்வாயில் விழுந்து பலியான கர்ப்பிணி பெண்

கால்வாயில் விழுந்து பலியான கர்ப்பிணி பெண்

Paramakudi Accident | சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சூரியபிரியதர்ஷினி எழுந்துகொள்ளமுடியாதபடி இரண்டு சக்கர வாகனத்தின் கீழ் சிக்கி போராடி இறந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரை சேர்ந்த பிரபாகர் - சூரியபிரியதர்ஷினி இருவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. சூரியபிரயதர்ஷினி தற்போது 40 நாள் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் நேற்று இரவு பரமக்குடியில் இருந்து பார்த்திபனூருக்கு இருசக்கர வாகனத்தில் மழையில் நனைந்தபடி சென்றுள்ளனர். கீழப்பெருங்கரை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்தின் ஒளிவிளக்கால் நிலை தடுமாறி இருவரும் சாலை ஓரம் இருந்த கால்வாய் பள்ளத்தில் விழுந்துள்ளனர்.

அந்த பள்ளத்தில் சுமார் 15 அடிக்கு மேல் தண்ணீர் இருந்துள்ளது. சூரியபிரியதர்ஷினி மேல் டூவீலர் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். பிரபாகரும் காயங்களுடன் சுயநினைவின்றி பள்ளத்தின் ஓரத்தில் விழுந்து கிடந்துள்ளார்.

இதையும் படிங்க : “கடலில் மூழ்கி செத்தாலும் பரவாயில்லனு தமிழகத்துக்கு கிளம்புனோம்” - தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதிகள் குமுறல்!

சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சூரியபிரியதர்ஷினி எழுந்துகொள்ளமுடியாதபடி இரண்டு சக்கர வாகனத்தின் கீழ் சிக்கி போராடி இறந்துள்ளார். சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் பிரபாகர் தனது மனைவியை காணவில்லை என தேடி, அருகில் இருந்தவர்களிடம் கூறிய பின்பு தண்ணீரில் அப்பகுதி மக்கள் தேடி உள்ளனர்.

அப்போது கால்வாய் பள்ளத்தில் அப்பகுதி மக்கள் தேடிய பின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில் சூரியபிரியதர்ஷினியின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனைக்கு அவரின் உடல்கொண்டு செல்லப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சாலையின் எதிர் திசையில் வந்த வாகனத்தால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணி பெண் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram