சென்னை அடுத்த மடிப்பாக்கம் மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வர் ஆலயத்தில் கடந்த 5ம் தேதியன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி அம்பாளுக்கு தீர்த்தவாரி உற்சவமானது நடைபெற்றது. இந்த தீர்த்தவாரி உற்சவத்தின்போது, குளத்திற்குள் 25க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் இறங்கி தீர்த்தவாரிக்காக மூழ்கி எழுந்தனர். அப்போது குளத்தில் இருந்த சேற்றில் ஒருவர் சிக்கினார். அவரை காப்பாற்ற சென்ற 5 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், தீர்த்தவாரி உற்சவத்தின்போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தகரை புரோகிதர்கள் நலச்சங்கம் சார்பில் அக்னி தீர்த்தம் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ராமேஸ்வரத்தில் உள்ள புரோகிதர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி அஞ்சலி செலுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram