முகப்பு /ராமநாதபுரம் /

சாய்ந்துவிழும் நிலையில் உள்ள மின் கம்பங்கள்.. மனுக்கள் கொடுத்தும் தீராத பாம்பன் மக்கள் பிரச்சினை!

சாய்ந்துவிழும் நிலையில் உள்ள மின் கம்பங்கள்.. மனுக்கள் கொடுத்தும் தீராத பாம்பன் மக்கள் பிரச்சினை!

X
சாய்ந்த

சாய்ந்த மின் கம்பங்கள்

Ramanathapuram news | ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் துருப்பிடித்து, சாய்ந்து விழும் நிலையில் உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிவாசல் தெரு பகுதியில், 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் துருப்பிடித்து, சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்களை மாற்றக்கோரி பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிவாசல் தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு முன்னர், முதன்முறையாக 30-க்கும் மேற்பட்ட ஸ்டீல் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. தற்போது, அந்த ஸ்டீல் மின்கம்பங்கள் உப்புகாற்று அரிப்பினால் கொஞ்சம் கொஞ்சமாக துருபிடித்து சேதமடைந்தும், சில கம்பங்ள் சாய்ந்து விழும் நிலையிலும் உள்ளன.

ஸ்டீல் மின்கம்பம் என்பதால் அவ்வப்போது கரண்சாரம் பாய்ந்து ஷாக் அடிக்கின்றன. இதனால் கடந்த வருடம் அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், மின்வாரிய ஊழியர்களும் மின்கம்பத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதில் ஏறி சரிசெய்ய அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறார் அப்பகுதி வார்டு உறுப்பினர்.

இதன் அருகில் துவக்கப்பள்ளி இருக்கிறது. மேலும் சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடுகின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் அதனை சரிசெய்து சிமெண்ட் கம்பங்களை அமைத்து தர கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

First published:

Tags: Local News, Ramanathapuram