ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை ( 10-11-2022 ) மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா? 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை ( 10-11-2022 ) மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா? 

மின் தடை

மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம்  துணை மின்நிலையத்தில்  வியாழக்கிழமை  (நவம்பர் 10) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 10) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மண்டபம், ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது.

    மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மின் தடை ஏற்படும் பகுதிகள்: அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயா்பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என  மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Electricity, Local News, Powercut, Ramanathapuram