ஹோம் /ராமநாதபுரம் /

பொங்கல் பரிசு தொகுப்பு : ராமநாதபுரம் மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு : ராமநாதபுரம் மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

ராமநாதபுரம் கலெக்டர்

ராமநாதபுரம் கலெக்டர்

2023 Pongal Gift : பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தும், அதனை வாங்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாகவும் ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படவுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பான முழு கரும்பு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 ஆகியவை வழங்கப்பட உள்ளது.

இதற்காக அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த 3ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. 9ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு பச்சரிசி, சர்க்கரை வாங்க துணிப்பை கொண்டு வர வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் ஒதுக்கீடு செய்த நாளில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று செல்லலாம்.

அதேபோல இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு விநியோகம் குறித்த புகார்களை 1077 எண்ணில் தெரிவிக்கலாம்” என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Ramanathapuram