ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்..

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்..

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

Pongal celebration : ராமேஸ்வரம் அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில்‌ பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு இஸ்லாமிய பெண்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உலக பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று என்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கவும், ராமேஸ்வரத்திற்கு மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை ஒன்றினைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. அதனால், ராமேஸ்வரம் அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் சுற்றுலாத் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் கலந்து கொண்டு இஸ்லாமிய பெண்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் வைத்துக் கொண்டாடினார். பின்னர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய் கால் குதிரை, உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

First published:

Tags: Local News, Ramanathapuram