ஹோம் /ராமநாதபுரம் /

வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்.. ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் அதிரடி..

வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்.. ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் அதிரடி..

X
பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள்

Pain Killer Tablets Seized : ராமநாதபுரம் வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வலை பகுதியில் இருந்து வலி நிவாரண மாத்திரைகள் இலங்கைக்கு நாட்டு படகு மூலம் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வேதாளை பகுதிக்கு சென்ற கியூ பிரிவு காவல்துறையினர் மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகளில் ஏறி சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது 10 மூட்டைகளில், 60 ஆயிரம் அட்டைகளில் வலிநிவாரண மாத்திரைகள் மறைத்து வைத்திருப்பதை பார்த்துள்ளனர்.

நாட்டுப் படகுடன் மாத்திரைகளை கைப்பற்றிய கியூ பிரிவு காவல்துறையினர், கடத்தல்காரர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் சர்வதேச மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும், இலங்கையில் இதை போதை பொருளாக பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்துவதற்கு முக்கிய பகுதியாக வேதாளை கடற்கரை பகுதி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர், உளவுத்துறை, மரைன் காவல்துறையினர், ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவினர் என பல்வேறு பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Crime News, Local News, Ramanathapuram