ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் 50,000 பனைமர விதைகள் நடவு..!

ராமநாதபுரத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் 50,000 பனைமர விதைகள் நடவு..!

பனை விதை நடும் விழா

பனை விதை நடும் விழா

Ramanathapuram | லயன்ஸ் இன்டர்நேஷனல் சங்கத்தின் சார்பாக மண்டபம் முகாமில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு  5 ஐந்து லட்சம் மதிப்புள்ள  உடைகள்,  உணவுப் பொருட்களை  வழங்கியும், 50–ஆயிரம் பனை விதை நடும் விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

லயன்ஸ் இன்டர்நேஷனல் சங்கத்தின் சார்பாக மண்டபம் முகாமில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள உடைகள், உணவு பொருட்களை வழங்கியும், 50 ஆயிரம் பனை விதை நடும் விழா நடைபெற்றது.

லயன்ஸ் இன்டர்நேஷனல் சங்கத்தினர் சென்னையை சேர்ந்த 324-கேயைச் சேர்ந்த அமைப்பினர், பொது மக்களுக்கு தொடர்ச்சியாக தமிழ்நாட்டு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மண்டபம் முகாமில் நடைபெற்றது.

இதையும் படிங்க : இலங்கைக்கு கடத்த இருந்த பெட்ரோல், மஞ்சள் உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்

இந்நிகழ்ச்சியில் இலங்கை தமிழர்களுக்கு சுமார்  ரூ.5 லட்சம் மதிப்பிலான வேஷ்டிகள், சேலைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மளிகை பொருட்களை வழங்கினர், இதேபோல் மண்டபம் முகாம் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்கள் முகாமிற்கு சென்று அனைவருக்கும் தேவையான நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து தமிழ் தேசத்தை பனைமர தேசமாக மாற்றும் நோக்கில் கடல்நீரில் இருந்து மண்‌ அரிப்பில் பாதுகாக்க பனைமர விதைகளை குஞ்சாரவலசை கிராமத்தில் 50 ஆயிரம் பனைமர விதைகள் நடப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில், இலங்கை தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கான துணை ஆட்சியர் சிவகுமாரி, ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசார்கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பனைமர விதைகளை நட்டு வைத்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramnad