முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு புனித பயணம் செல்லும் பக்தர்கள்..  

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு புனித பயணம் செல்லும் பக்தர்கள்..  

X
ராமேஸ்வரத்தில்

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு புனித பயணம் செல்லும் பக்தர்கள்

Ramanathapuram News : ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து காசிக்கு புனித யாத்திரை மேற்கொள்ள 66 நபர்கள் பேருந்து மூலம் புறப்பட்டு சென்ற பக்தர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழக அரசு சட்டப்பேரவையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து காசி விசுவநாத சுவாமி திருக்கோவிலுக்கு இவ்வாண்டில் 200 பக்தர்கள் ஆன்மீகப் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும், இதற்கான செலவினை ஒரு நபருக்கு ரூ.25,000 என ரூ.200 பேருக்கு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்குமெனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறையின் 6 மண்டலங்களிலும் விருப்பமுள்ளவரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றப்பட்டன.

அந்தவகையில் இந்த விண்ணப்பங்களில் தகுதியுடைய 200 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை 3 அணிகளாக பிரித்து ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவரையும் ராமேஸ்வரம் அழைத்து வந்தனர். இந்நிலையில், முதல் அணியாக 66 பயணிகளை கொண்ட முதல் அணி ஆன்மிக பயணத்தை தொடங்கியது. இந்த பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து பேருந்து மூலம் விழுப்புரத்திற்கு சென்று அங்கிருந்து காசிக்கு ரயில்கள் மூலம் செல்கின்றனர். மீண்டும் காசியிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து பூஜைகள் செய்து தீர்த்தத்தில் நீராடி வழிபாடு பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram