இயற்கை மற்றும் கடல் வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேக்கரும்பு அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி தீனா.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த தீனா (40) என்பவர் Fisherman voice என்கிற யூடுப் தளத்தை மேற்கொண்டு வருகிறார். இவர் சமூகசேவைகளில் ஈடுபட்டு மரக்கன்றுகள் வைத்து ராமேஸ்வரம் தீவு பகுதியை பச்சை வனமாக மாற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.
இவரது அடுத்த முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் இயற்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு பயணம் தொடங்கியுள்ளார். கடல் வளம் காக்கவும், மரம் வளர்ப்போம், இயற்கை காப்போம், பாலிதீன் ஒழிப்போம் என்ற நோக்கத்தோடு செல்லும் வழியில் எல்லாம் மரக்கன்றுகள் வைத்து செல்கிறார்.
இன்று காலை 10 மணிக்கு இவரது பயணம் அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. 30 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.
ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான் அவர்கள் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மீனவ சங்க தலைவர்கள், தங்கச்சிமடம் பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயணத்தை தொடங்கி வைத்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.