முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் உயிர்சேதம் ஏற்படுத்தும் கால்வாயில் தடுப்புசுவர் அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு...

பரமக்குடியில் உயிர்சேதம் ஏற்படுத்தும் கால்வாயில் தடுப்புசுவர் அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு...

X
ஆட்சியரிடம்

ஆட்சியரிடம் மனு

Ramanathapuram News | தடுப்புச்சுவர் இல்லாததால் சிறுவர்கள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும், பொதுப்பணித்துறை கால்வாய்களை, சிமெண்ட் தரை அமைத்து கால்வாயை மூடவும், தடுப்புச்சுவர் அமைக்கவும் ஊராட்சி மன்ற தலைவர் தலைவருடன் அக்கிராமத்தினைச் சேர்ந்தோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வெங்காளூர் கிராமத்தில் சுமார் 450-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரின் நடுவே கீழக்கெடுமனூர் மற்றும் சங்கங்கோட்டை ஆகிய கிராமத்திற்கு வைகை நீர் செல்லும் இரண்டு பொதுப்பணித்துறை கால்வாய்கள் செல்கின்றன.

இந்த கால்வாயானது ஆழம் அதிகமாக இருப்பதாலும், தடுப்புச்சுவர் இல்லாததால் சிறுவர்கள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும், கால்நடைகளும் நீரில் மூழ்கி இறப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்க ஊரின் ஆரம்பத்தில் இருந்த எல்லை வரை கால்வாய்களின் நடுவே சிமெண்ட் தரை அமைத்து கால்வாயை மூடவும், தடுப்புச்சுவரும் ஏற்படுத்தினால் தேவையற்ற உயிர் இழப்புகளை தவிர்க்கவும், பெரும் உதவியாக இருக்கும் என்று அக்கிராமத்தினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து நடவடிக்கையை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram