முகப்பு /ராமநாதபுரம் /

குருவிக்கார சமூக மக்களுக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்ககோரி ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு

குருவிக்கார சமூக மக்களுக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்ககோரி ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு

X
குருவிக்கார

குருவிக்கார சமூக மக்களுக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்ககோரி ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு

Ramanathapuram News : ராமநாதபுரம் சுற்று வட்டாரப்பகுதிகளில் வசித்து வரும் குருவிக்காரர் சமூகத்தினருக்கு, ஜாதிச்சான்று வழங்கக்கோரி குருவிக்காரர் சமூக மக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான குருவிக்கார சமூகமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகள் குருவிக்காரர் தெரு என்று அழைக்கப்படுகிறது. படிப்பறிவின்றி இம்மக்கள் வாழ்ந்து வந்த நிலையில், இம்மக்கள், தற்போது, குருவிக்காரர் சமூக குழந்தைகள் பலர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், குருவிக்காரர் என்று ஜாதிச்சான்று வழங்கக்கோரி ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான குருவிக்காரர் சமூக மக்கள் ஒன்று திரண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, கோட்டாட்சியர் கோபுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த மனுவில், தற்போது நாராளுமன்றத்தில் நரிக்குறவர் குருவிக்காரர், காட்டுநாயக்கர், கணிக்கர், மலைக்குறவர், மற்றும் பல பழங்குடியின சமூகங்களுக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்குவதற்கு சட்ட இயற்றப்பட்டதன் அடிப்படையில், தமிழக அரசும் வழங்கிட சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : "பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் மீன்" கிளி மீன் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிக்கார சமூக மக்களுக்கு குருவிக்காரர் என்று ஜாதிசான்று வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram