முகப்பு /ராமநாதபுரம் /

“இங்கிலீஷ் மீடியம் கல்வி வேண்டும்..” ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்த மாணவிகள்..

“இங்கிலீஷ் மீடியம் கல்வி வேண்டும்..” ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்த மாணவிகள்..

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்த மாணவிகள்

Ramanathapuram Schools : ராமநாதபுரம் நகராட்சி அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை பயில நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் மனு கொடுத்தனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் நகராட்சிகுட்பட்ட வள்ளல் பாரி தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 2012 முதல் ஆண்டு ஆங்கிலவழிக் கல்வியை கற்று வந்தனர்.

இந்நிலையில், தற்போது 2022-2023 கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்து 11ம் வகுப்பு செல்லும் மாணவிகளுக்கு ஆங்கில வழிக்கல்வி முறை அரசு பள்ளி மற்றும் நகராட்சி பள்ளிகளில் இல்லாததால் படிப்பை தொடரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்த மாணவிகள்

இதையடுத்து, மாணவிகளின் கல்வியை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மேற்படிப்புக்கு உதவவேண்டியும், எதிர்காலத்தில் வரும் மாணவிகளின் கல்வியை கருத்தில் கொண்டு 11ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வியை கற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றார் ஆசிரியர் கழகம் நிர்வாகிகளுடன் மாணவிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram