Home /ramanathapuram /

தனுஷ்கோடி பகுதியில் கரை ஒதுங்கிய 60 கிலோ எடை கொண்ட பெருந்தலை ஆமை

தனுஷ்கோடி பகுதியில் கரை ஒதுங்கிய 60 கிலோ எடை கொண்ட பெருந்தலை ஆமை

பெருந்தலை ஆமை

பெருந்தலை ஆமை

Rameshwaram Dhanushkodi: மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடற்பகுதியில் சுமார் 60 கிலோ எடை கொண்ட அரியவகை கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோளக காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது.

    இந்தக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, டால்பின் போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன.  குறிப்பாக சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை மற்றும் பச்சை ஆமை என 5 வகை கடல் ஆமைகள் இந்திய கடல் பகுதியில் காணப்படுகின்றன. அதில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் சித்தாமை, பெருந்தலை ஆமைகள் அதிகளவு வாழ்ந்து வருகிறது.

    இந்நிலையில்  தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் கடல் ஆமை குஞ்சு பொரிப்பகம் அருகே உள்ள மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியில் 60 கிலோ எடை கொண்ட பெருந்தலை ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த ராமேஸ்வரம் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெருந்தலை ஆமையை மீட்டு கடற்கரை மணலில் புதைத்தனர்.

    கரை ஒதுங்கிய பெருந்தலை ஆமை பெரிய கப்பலின் பின்புறம் உள்ள இரும்பு விசிறியில் அடிபட்டு காயமடைந்திருக்கலாம் அல்லது மீனவர்கள் வலையில் சிக்கி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Dhanushkodi, Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி