Home /ramanathapuram /

பொது இடங்களில் குப்பைகளை வீசுவதை தடுக்க வலியுறுத்தி மிதிவண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

பொது இடங்களில் குப்பைகளை வீசுவதை தடுக்க வலியுறுத்தி மிதிவண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

தூய்மைக்கான

தூய்மைக்கான மக்கள் இயக்கம்; மிதிவண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

Ramanathapuram District: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில்  மிதிவண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம்  மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மிதிவண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மண்டபம் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் , பொதுமக்கள் குப்பைகளை பொது இடங்களில் வீசி எரியாமல் இருக்கவும், குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மண்டபம் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில், பொதுமக்கள், தன்னார்வலர்கள் , பள்ளி மாணவ மாணவிகள், பேரூராட்சி பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களின், மிதிவண்டிவிழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதையடுத்து, மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் அரசப்பன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் , நம்புராஜன் பேரூராட்சி இளநிலை உதவியாளர் முனியசாமி உள்ளிட்ட பங்கேற்றனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி