முகப்பு /ராமநாதபுரம் /

குடியிருக்க மாற்று இடம் கேட்டு ராமேஸ்வரத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

குடியிருக்க மாற்று இடம் கேட்டு ராமேஸ்வரத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

X
12

12 வீடுகளை 48 மணி நேரத்தில் காலி செய்ய நோட்டிஸ்..

People Protest In Rameswaram : அரசு புறம்போக்கு இடத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க கோரி ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம். 

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் காமராஜர் பகுதியில் 40 வருடங்களுக்கு மேலாக வசித்துவரும் அரசு புறம்போக்கு இடத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க கோரி தாலுகா அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்துவிட்டு உள்ளிருப்பு போராட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான காமராஜர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் ஏராளமான ஏழை எளிய மக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

தற்போது, இந்த காமராஜர் நகர் பகுதியானது போக்குவரத்திற்கு முக்கியமான பகுதியாக மாறிவிட்டதால், இப்பகுதியில் உள்ள தனியார் நிலங்கள் அதிக விலைக்கு செல்வதற்காக அரசு புறம்போக்கு இடத்தில் இருக்கும் ஏழை மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இங்கு இருக்கும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் 12 வீடுகளை மட்டும் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் மூலமாக 48 மணிநேரம் அவகாசம் கொடுத்து நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.  இதனை கண்டித்து, அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தாசில்தாரிடம் மனு அளித்து முறையிட்டு, தற்போது இருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும், இல்லையென்றால் மாற்று இடம் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு கண்டு உறுதியான பதில் அளிக்கும்வரை தாலுகா அலுவலகத்தினை விட்டு செல்ல மாட்டோம் என குழந்தைகள், பெண்கள் அனைவரும் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் ‌.

First published:

Tags: Local News, Ramanathapuram