ஹோம் /ராமநாதபுரம் /

இருளில் மூழ்கியிருக்கும் பாம்பன் சாலை பாலம்.. மின்விளக்குகளை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

இருளில் மூழ்கியிருக்கும் பாம்பன் சாலை பாலம்.. மின்விளக்குகளை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

X
இருளில்

இருளில் தவிக்கும் சாலை

Pamban Bridge | பாம்பன் சாலை பாலத்தில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் மின் விளக்குகளை சரி செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

பாம்பன் சாலை பாலத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் அமைக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் கடந்தும் மின் விளக்குகள் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு சென்றுவிட்டு வரும் பெண்கள் இரவில் இருட்டில் அச்சத்துடன் செல்கின்றனர்.

தற்போது பனிமூட்டமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விரைந்து நடவடிக்கை எடுத்து மின்விளக்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாம்பன் பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலை பாலமானது மண்டபம் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்காற்றிவருகிறது.ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள், பாம்பன் சாலை பாலத்தின் மேல் நின்று இரண்டு பக்கமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்கும் கடல் அழகை ரசித்துப் குளிர்ந்த காற்றை சுவாசித்தும் செல்கின்றனர்.

ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மண்டபம் பகுதியிலிருந்துபாலத்தின் தொடக்கத்துக்குவரும்‌போது பாலம் இருளில் மூழ்கி இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பல மனுக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு கொடுத்து மின் கம்பங்கள் அமைத்து இரண்டு பக்கமும் எரியும்படி மின்விளக்குகளுடன்‌ கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டது.

அமைக்கப்பட்டதில் இருந்து மின் விளக்குகள் பயன்பாட்டிற்குவராமல் இருந்து வருகிறது. பாம்பன் சாலை பாலத்தின் தொடக்கம் மற்றும் இறுதியிலும் இரண்டு பக்கமும் எரியும்படி அமைக்கப்பட்ட மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் சாலையை முறையாக கணிக்கமுடியாமல் விபத்துக்கு உள்ளாகினர்.

மேலும் தற்போது மழை காலம் முடிந்துபனிபொழிய தொடங்கிவிட்டது.இருளில் மூழ்கி இருக்கும் பாலத்தில் விபத்துகள் சிறிய விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. பாம்பனில் இருந்து தொடங்கும் பாலத்தின்அருகில் தெருக்கள் மற்றும் அதிகமான வீடுகள் இருப்பதால் அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரும் இருட்டில் அப்பகுதி வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

விளைநிலத்தின்‌ அருகில் உப்பளம்.. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் ஆனைகுடி விவசாயிகள்..

அமைக்கப்பட்டதில் இருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல்உள்ள இந்த மின்விளக்குகளை எரிய வைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்து ஏற்படாமல் செல்வதற்கும், அப்பகுதி பெண்கள் அச்சமின்றி சாலையில் செல்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்று பாம்பன் பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram