Home /ramanathapuram /

பாம்பன் அருகே தெருவிளக்கு, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதி.! 

பாம்பன் அருகே தெருவிளக்கு, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதி.! 

சேதமடைந்த

சேதமடைந்த நிலையில் சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியிலுள்ள மீனவ கிராமத்தில் தெருவிளக்கு வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கலங்கரை விளக்கத்திற்கு அருகே பாம்பன் இரண்டாவது வார்டு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவ சமுதாயத்தை குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வசிக்கும் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அவசர காலங்களில் உடல்நிலை சரிஇல்லாத மக்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கோ, மற்ற காரணத்திற்காகவோ வாகனங்கள் வந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்தப் பகுதியில் தெருவிளக்குகள் எரிந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதாகவும், அதிகாலை நேரத்தில் குடிதண்ணீர் பிடிக்க செல்லும்போது இருட்டில் செல்வதாகவும் இதனால் சாலையில் தடுமாறி விழுந்து கை கால்களில் அடி ஏற்படுவதாகும், இந்த சேதுமடைந்த சாலையில் குழந்தைகள் விளையாடுவதால் அவர்களுக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகியிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாற்றுகின்றனர்.

இந்நிலையில், உடனடியாக மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதிகளுக்கு சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் நேரங்களில் மட்டும் தங்களைத் தேடி வருபவர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தாங்கள் அவர்களை தேடி சென்றாலும் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி