முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் மண்ணெண்ணெய் முறையாக வழங்குவதில்லை - குமுறும் மக்கள்

ராமேஸ்வரத்தில் மண்ணெண்ணெய் முறையாக வழங்குவதில்லை - குமுறும் மக்கள்

X
மண்ணெண்ணெய்

மண்ணெண்ணெய் விற்பனை நிலையம்

Ramanathapuram News | கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மண்ணெண்ணெய் பங்கில்‌ முறையாக மண்ணெண்ணெய் ஊற்றுவது இல்லை என ராமேஸ்வரம் பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரத்தில் செயல்படும் மண்ணெண்ணெய் பங்கில் முறையாக மண்ணெண்ணெய் வழங்குவது இல்லை என்றும், மண்ணெண்ணெய் ஊற்றும் தேதி குறிப்பிடப்படுவது இல்லை என்றும், கால் லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கினால் மூன்று லிட்டர் வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் ராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் மண்ணெண்ணெய் பங்கில் மாதந்தோறும் 6,000-திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசால் ஊற்றப்படும் மண்ணெண்ணெய் வாங்கிவருகின்றனர். விறகு அடுப்பின் மூலம் சமைப்பவர்கள் இந்த மண்ணெண்ணெயைப் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மண்ணெண்ணெய் பங்கில்‌ முறையாக மண்ணெண்ணெய் ஊற்றுவது இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து,  பேசிய பொதுமக்கள், ‘மாதந்தோறும் மண்ணெண்ணெய் ஊற்றும் தேதி குறிப்பிடப்படுவது இல்லை. அவர்களின் விருப்பம்போல மாதத்தின் இறுதி நாட்களில் எதாவது நாட்கள் திறந்து மண்ணெண்ணெய் பங்கிற்கு அருகில் உள்ளவர்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் விநியோகம் செய்கின்றனர்.

மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் தகவலறிந்து வருவதற்குள் மண்ணெண்ணெய் முடிந்துவிட்டதாக தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர். 6,000 பேரில் 60 பேருக்கு கூட மண்ணெண்ணெய் முழுமையாக வழங்கப்படுவது இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, பொதுமக்களுக்கு கால் லிட்டர் அளவு மண்ணெண்ணெய் மட்டுமே ஊற்றுகின்றனர். ஆனால் மூன்று லிட்டர் வாங்கியதாக தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தி வருகிறது. பங்க் முழுவதும் புதர் செடிகள் வளர்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது .

விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலின சமத்துவம் பற்றி விழிப்புணர்வு

இதனைத்தொடர்ந்து, மாதந்தோறும் மண்ணெண்ணெய் ஊற்றப்படும் தேதியை பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்க வேண்டும் என்றும், வாங்கப்படும் மண்ணெண்ணெய் லிட்டர் மட்டுமே குறுஞ்செய்தியில் குறிப்பிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் ராமேஸ்வரம் பொதுமக்கள்.

First published:

Tags: Local News, Ramanathapuram