Home /ramanathapuram /

அப்துல் கலாம் நினைவிடத்தில் பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி அசத்தல்.. பார்வையாளர்கள் வியப்பு..

அப்துல் கலாம் நினைவிடத்தில் பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி அசத்தல்.. பார்வையாளர்கள் வியப்பு..

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம்

Ramanathapuram District : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 7-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்க சிவ சரவணா சிலம்பப் பயிற்சி பள்ளி சார்பில் 150 மாணவர்கள் மாணவிகள் அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் சிலம்பம் சுற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்கவும் ...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பேய்கரும்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம் மற்றும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வரும் இந்த சூழலில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்  கவசம் அணிய வலியுறுத்தியும் சிவ சரவணா சிலம்பு பயிற்சி பள்ளி சார்பில் ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பு அப்துல் கலாம் தேசிய நினைவகம் எதிரே 150 மாணவர்கள், மாணவிகள் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டு ஒரு மணிநேரம் வெவ்வேறு முறையில் சிலம்பம் சுற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சாகசம் செய்தனர்.

சிலம்பம் சுற்றி அசத்திய பள்ளி மாணவர்கள்..


5 வயது முதல் 20 வயதுடைய 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம் சுற்றியது பார்ப்போரை வியப்படைய செய்தது.

சிலம்பம் சுற்றி அசத்திய பள்ளி மாணவர்கள்..


இந்த சிலம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றியதை கண்டு ரசித்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.

சிலம்பம் சுற்றி அசத்திய பள்ளி மாணவர்கள்..


இதுகுறித்து சிலம்ப ஆசிரியர் சரவணன் கூறுகையில் , “சிலம்பம் கலை என்பது தமிழர்களின் வீர விளையாட்டில் ஒன்று, தற்போதுள்ள குழந்தைகள் தொலைபேசியில் நேரத்தை கழிப்பதை பார்த்த போது நமக்கு திறந்த கலையை அவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களை மூலம் அழிந்து வரும் கலையை புத்துணர்ச்சி பெற செய்து அவர்கள் மூலம் பல பேருக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்க என்று ஆர்வத்துடன் ஆரம்பித்தேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதைப்பார்த்து விட்டு நிறைய மாணவர்கள் வந்து சேர்ந்தனர் பெற்றோர்களும் ஆர்வமுடன் தங்களது பிள்ளைகளைக்கும் கற்றுத்தர எனது பள்ளியில் சேர்த்தனர். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும் கற்பித்து தரப்படுகிறது ஆர்வமுள்ளவர்கள் வந்து சேரலாம் என்று கூறினார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி