ஹோம் /ராமநாதபுரம் /

வரும் 30ம் தேதி ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா - ஏற்பாடுகள் என்னென்ன?

வரும் 30ம் தேதி ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா - ஏற்பாடுகள் என்னென்ன?

தேவர் குருபூஜை

தேவர் குருபூஜை

Muthuramalinga Thevar Guru poojai | ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், வரும் 28ஆம் தேதி கும்பாபிஷேகமும், 30ஆம் தேதி குடமுழுக்கு விழாவும் நடைபெறவுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் பசும்பொன்னில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பொதுவாக, பசுபொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில், தினமும் பூஜைகள், மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் கோவில் கட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவர் நினைவாலயத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை அடுத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தேவர் குருபூஜையுடன் கும்பாபி ஷேகமும் நடைபெற இருக்கிறது.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

அதன்படி, வரும் 30ஆம் தேதி தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா, 60வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. முன்னதாக, அக்டோபர் 28ம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ம் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகின்றன.

வருகின்ற 28ம் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோவில், முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், அங்கே அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் காவல்துறை அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Muthuramalinga Thevar, Ramanathapuram, Thevar Jayanthi