பாம்பன் மீனவர்களின் வலையில் கிளி ஒன்று சிக்கியிருந்தால் இப்படி தான் உருவம் கொண்டிருக்கும். அதனால் தான் இதை கிளிமீன் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த கிளிமீன் என்ற பெருந்திரள் மீனின் நாம் அறியாத சிறப்புகளை பற்றி அறிந்துகொள்வோமா.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பி மீன்களை துறைமுகத்தில் இறக்கி எடைபோட்டு கொண்டிருந்தனர். அப்போது கிளிபோன்று வாய் பகுதியையும், அதன் இறகுகளின் வண்ணத்தை போன்று உடலமைப்பையும், கிளியின் வாளைப்போன்று மீனின் வாளும் ஒருகிளியானது மீனைப்போல இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு மீன் இருந்தது. இதனை பற்றி மீனவர்களிடம் கேட்கும்போது கிளிமீன் என்று கூறினர்.
கிளி மீன் எங்கு வசிக்கும் தெரியுமா?
இந்த கிளிமீனானது பாறைக்குள்ளும், பவளப்பாறைகளுக்குள்ளும் வாழ்பவை. இதனுடைய பெயர் பெருந்திரள் ஆகும். இதன் வாய் அமைப்பால் பாறைகளில் துளையிடும் தன்மை உடையதால் மீனவர்கள் பாக்குவெட்டி என்று கூறுகின்றனர். இவை உலகில் கிளிஞ்சான் என்ற தொண்ணூற்று ஜந்து வகை மீன்கள் இனங்கள் வாழ்கின்றனவாம்.
இதையும் படிங்க : 6 மணி நேரத்தில் அதிரவைத்த 2 கொலைகள், 1 துப்பாக்கிச்சூடு.. திண்டுக்கல்லில் பயங்கரம்!
கொழுப்பை குறைக்குமா?
இதன் மருத்துவ குணங்கள் என்னவென்றால் ஒமேகா 3 ஊட்டச்சத்தும் நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இதனை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும். கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எழும்பு, பற்களை வலுப்படுத்த உதவுகிறது. இந்த கிளிமீனின் வாய்ப்பகுதியானது, தாடை எழும்புகளில் வெளிப்புற மேற்பரப்பில் பற்கள் இருக்கமாக இருக்கும், இதனால் கிளியின் அலகு போன்ற அமைப்பில் இருக்கும். சிறியதாக இருக்கும் போது ஒரு நிறத்திலும் பெரியதாகும்போது வேறொரு நிறத்திலும் மாறும் தன்மை கொண்டது. பாறைகளில் உள்ள பாசிகளை தின்று வாழ்வதால் பவளப்பாறைகளில் உயிர்வாழும் அரியவகை கடல் உயிரினங்கள் வாழ்வதற்கும், வளர்வதற்கும் துணைபுரிகிறது.
நட்சத்திர ஓட்டல்களில் செம டிமாண்ட் :
இவைகளின் வளர்ச்சி இனங்களுக்கேற்ப மாறுபடும். பெரும்பாலான இனங்கள் 12 முதல் 20 அங்குலம் நீளம் வரையிலும் வளரும் தன்மை கொண்டது. பெருங்கடல்கள் 95 வகைகள் இருந்தாலும் மன்னார் வளைகுடா பகுதியில் 13 வகையான கிளிமீன்கள் காணப்படுகின்றன. இதிலும் இந்த ஸ்கேரஸ் கோபான் என்ற இந்த பெருந்திரள் வகை மீன்கள் மன்னார் வளைகுடாவில் அதிகமாக வாழ்வதால் மீனவர்களுக்கு கிடைக்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த மீனின் சுவை அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு உணவுக்காக அனுப்பப்படுகிறது. இதனை விரும்பி உண்ணும் அளவிற்கு பெரும் சுவை உடையது. தற்போது, கிலோ ரூ.220 முதல் ரூ.260 வரையிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாம்பனில் அதிகப்பட்சமாக ஒரு மீன் 5 கிலோ வரை எடை கொண்டு வந்துள்ளது. இதன் ஆயுட்காலம் 30 ஆண்டுகள் வரை வாழுமாம். மேலும் இதன் பெரும் சிறப்பு என்னவென்றால் இவை இருபால் உயிரி என்றும் கூறிகின்றனர். பெண்ணாக பிறந்து பருவநிலையின்போது ஆணாக மாறும் தன்மையைப் பெருமாம். இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை என தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram