ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் ரயில்வே துறையின் பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் சமூக நலப்பணிகள் குறித்து ஆலோசனை

ராமேஸ்வரத்தில் ரயில்வே துறையின் பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் சமூக நலப்பணிகள் குறித்து ஆலோசனை

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

Rameshwaram : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ரயில்வே துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டமானது நிலைக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ஓவ்வொரு அரசு துறைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அடங்கிய நிலைக்குழு உள்ளது. இதேபோல் ரயில்வே துறைக்கும் பாராளுமன்ற நிலைக்குழு உள்ளது. இந்த நிலைக்குழு கூட்டமானது ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் ரயில் நிலையம் மற்றும் தனுஷ்கோடி புதிய ரயில் நிலையம் அமையும் இடத்தை ஆய்வு செய்ய வந்த நிலைக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலைக்குழு கூட்டத்தில் ரயில்வே பொதுத்துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாகழகம், பிரைத்வெயிட் இரும்பு உருக்கு நிறுவனம், கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட், ஆகியவை பங்கேற்கும் சமுதாய நலப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஆலோசனை நடைபெற்றது, இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram