ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளியை பொதுமக்கள் முற்றுகை.. அரசு பள்ளியாக மாற்ற கோரிக்கை..

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளியை பொதுமக்கள் முற்றுகை.. அரசு பள்ளியாக மாற்ற கோரிக்கை..

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

Ramanathapuram District News : ராமேஸ்வரத்தில் பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அரசு பள்ளியாக மாற்றவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும், ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கவும் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியானது ராமநாதசுவாமி திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளியாக உள்ளது.

இந்தப் பள்ளியில் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவ மக்களின் குழந்தைகள் மற்றும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் என ஆறாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை 966 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் புகையிலை பொருள் குறித்து விழிப்புணர்வு.. அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..

இந்த பள்ளியில் சராசரியாக 30 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.ஆனால் தற்போது 16 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர். மேலும் 16 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பற்றாக்குறை இல்லாமல் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தினால் மட்டுமே மாணவிகள் கல்வி திறன் மேம்படும்.

மேலும் அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி மாணவிகள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், அரசு உதவி பெறும் பள்ளியாக உள்ளதை அரசு பள்ளியாக மாற்றினால் மட்டுமே நீட்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

இந்நிலையில், இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் இணைந்து ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து, போராட்ட இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் பெற்றோர் மற்றும் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின்கோரிக்கைகளை ஏற்று விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மாணவிகளை கோரிக்கை மனுவாக வழங்கப்படும் என்று உறுதியளித்தார். அதனையடுத்து,போராட்டம்கைவிடப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram