ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடியில் நடைபெற்ற ராமநாதபுரம் மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி..!

பரமக்குடியில் நடைபெற்ற ராமநாதபுரம் மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி..!

 வலுதூக்கும் போட்டி

வலுதூக்கும் போட்டி

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பில் 24-ஆம் ஆண்டு வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

    பரமக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட போட்டியாளர்கள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பில் 24-ஆம் ஆண்டு வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பங்கேற்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 14 பெண்கள் உட்பட 66 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியானது 53 முதல் 105 கிலோ என 9 பிரிவுகளின் கீழ் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைத்தப்பட்டது.

    இதையடுத்து, ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பங்கேற்பார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Published by:Suresh V
    First published:

    Tags: Local News, Ramanathapuram, Sports