முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் வழக்கு - சிபிசிஐடி விசாரணை கோரி கடையடைப்பு போராட்டம்

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் வழக்கு - சிபிசிஐடி விசாரணை கோரி கடையடைப்பு போராட்டம்

X
கடையடைப்பு

கடையடைப்பு போராட்டம்

Ramanathapuram District | பரமக்குடியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் தனது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி வியாபாரிகள் நகர் பகுதி முழுவதும் கடைகள் அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று நபர்களையும், அதற்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க உதவிடவேண்டும், நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளை அடைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கண்டங்களை பதிவு செய்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram