முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள்.. அதிகாரிகள் ஆய்வு!

பரமக்குடியில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள்.. அதிகாரிகள் ஆய்வு!

X
அதிகாரிகள்

அதிகாரிகள் ஆய்வு

Ramanathapuram News | ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை மத்திய அரசின் கூட்டுறவு மற்றும் நிர்வாக இயக்குனர் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இணைச் செயலாளர் பங்கஜ்குமார் பன்சால் பரமக்குடியில் ஆய்வு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Paramakudi | Ramanathapuram

பரமக்குடியில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து மத்திய அரசின் கூட்டுறவு மற்றும் நிர்வாக இயக்குனர் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இணைச் செயலாளர் அரசு தலைமை மருத்துவமனை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்‌ ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை மத்திய அரசின் கூட்டுறவு மற்றும் நிர்வாக இயக்குனர் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இணைச் செயலாளர் பங்கஜ்குமார் பன்சால் பரமக்குடியில் ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் மருச்சுக்கட்டிஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தனி நபர் கழிப்பறை கட்டிடம் கட்டி உள்ளதா, பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொண்டார்.

இதையடுத்து, பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு, குழந்தைகளுக்கு வழங்கும் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வகம் ஆகிய அனைத்து முக்கிய பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, பரமக்குடி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பார்வையிட்டு அங்கு இருப்பு வைத்துள்ள மிளகாய், பருத்தி, நெல், ஆகியவற்றை பார்வையிட்டு, இ-னாம் மின்னணு வர்த்தகம் திட்டத்தையும் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய லாபத்தில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திட உறுதுணையாக இருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

First published:

Tags: Local News, Paramakudi Constituency, Ramanathapuram