ஹோம் /ராமநாதபுரம் /

கலைத்திருவிழாவில் முதலிடம் பிடித்த மாணவனைப் பாராட்டிய பரமக்குடி எம்எல்ஏ

கலைத்திருவிழாவில் முதலிடம் பிடித்த மாணவனைப் பாராட்டிய பரமக்குடி எம்எல்ஏ

X
மாணவனைப்

மாணவனைப் பாராட்டிய எம்.எல்.ஏ

Ramanathapuram | கலைத் திருவிழாவில் முதலிடம் பிடித்த மாணவனை பரமகுடி எம்.எல்.ஏ பாராட்டினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழக அரசின் கலைத் திருவிழாவில் இசைக்கருவி ஹார்மோனியம் வாசித்தலில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவனை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிம்மேந்திரவேலன். தமிழக அரசு நடத்திய கலைத் திருவிழாவில் 9 மற்றும் 10- ஆம் வகுப்பு பிரிவில் ஹார்மோனியம் இசைக் கருவி வாசித்தலில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சான்றிதழும், பதக்கமும் பெற்றார்.

சிம்மேந்திரவேலன்

இந்நிலையில், சிம்மேந்திரவேலனின் தந்தை சீமான் நாடகத்தில் ஹார்மோனியம் வாசித்து வருகிறார். தந்தை கற்றுக் கொடுத்ததன் மூலம் இன்று மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். வெற்றி பெற்ற சிம்மேந்திர வேலனுக்கு பயிலுன் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து கலைத்திருவிழாவில் பெற்ற பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவற்றை எம்எல்ஏ முருகேசனிடம் காண்பித்து மாணவனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற வேண்டும் என மாணவனுக்கு ஊக்கமளித்து எம்.எல்.ஏ வாழ்த்தினார்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram