ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவில் உபகோவிலான மேற்குகோபுர வாசலில் அமைந்துள்ள முருகன் கோவிலில் இந்தாண்டு நடைபெற உள்ள 61ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழாவானது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரம் தீவில் உள்ள சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அலகு குத்தியும், காவடிகள் பால்காவடி, பறவைக்காவடி, பன்னீர் காவடி, மயில்காவடி எடுத்தும் மேலவாசல் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதனை முன்னிட்டு, பக்தர்களுக்கான காவடி எடுக்க வேல்கள் அனைத்தும் பாலிஸ் செய்து தயார் செய்யப்படுகிறது. இந்த வேல்கள் ராமேஸ்வரத்தில் இருந்தால் உப்பு காற்றினால் விரைவில் துருபிடித்து விடும் என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்தில் வைத்திருப்பர்.
ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இங்கு கொண்டு வந்து, அதில் உள்ள இரும்புக்கரைகள் தூசி ஆகியவற்றை நீக்கி பாலிஷ் செய்து மேலும் தேர் காவடிகளுக்கு பெயிண்டுகள் அடித்து தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இதில், வேல் காவடி 5 அடிமுதல் 25 அடி வரையிலும் வேல்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒரு 12 அடி 15 அடி வேல் புதிதாக தயாரிக்க ரூ. 3000 முதல் ரூ.4000 ஆயிரம் வரை செலவாகும். அளவு வேறுபாட்டை பொருத்து விலையும் நிர்ணயிக்கப்பட்டுகிறது. இதனை பாரமரிக்க ஒவ்வொரு வேலுக்கும் குறைந்தபட்சம் 2000 வரை செலவாவதாக சொல்லப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், இதனை முறைப்படி பாதுகாக்காவிட்டால் உப்புக்காற்று அரிப்பில் சிறிதளவு துருப்பிடித்தால் கூட அதனை பயன்படுத்த முடியாமல் ஆகிவிடும் என்கின்றனர் இதனால், தற்போது பாலிஷ் செய்து வர்ணம் பூசும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram