முகப்பு /ராமநாதபுரம் /

பங்குனி உத்திரம் திருவிழா... ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பங்குனி உத்திரம் திருவிழா... ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

X
பங்குனி

பங்குனி உத்திரம் திருவிழா

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டம் வழிவிடு முருகன் கோவிலின் 83ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றி காப்பு கட்டப்பட்டது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் வழிவிடு முருகன் கோயில் 83-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றி காப்பு கட்டப்பட்டது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற அருள்மிகு வழிவிடு முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 83ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

இதில், முதல்நாள் நிகழ்வில் முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகங்களுடன் நடைபெற்றன. முதல் நாள் என்பதால் சிறப்பு அலங்காரத்தில் வழிவிடு முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காப்புக்கட்டுதல்

இதனைத்தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி நேர்த்திக்கடன் செலுத்த பூக்குழி இறங்குதல், வேல்குத்துதல், பால்குடம் எடுக்கும் நிகழ்வு போன்றவை நடைபெறவுள்ளன.

top videos

    இந்நிலையில், ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு காப்பு கட்டி சுவாமி தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram