முகப்பு /ராமநாதபுரம் /

10 நாட்கள் பங்குனி திருவிழா : பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

10 நாட்கள் பங்குனி திருவிழா : பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

X
பரமக்குடி

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயம்

Panguni Uthiram | பரமக்குடியில் பிரசித்தி பெற்ற முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலின் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, கோயில் கொடி‌மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழாவானது தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவானது 10 நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவானது முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பட்டாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தினந்தோறும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். தொடர்ச்சியாக, வரும் 31ஆம் தேதி வண்டி மாகாளி வைபவமும், ஏப்ரல் 5ஆம் தேதி தேரோட்டமும் மற்றும் ஏப்ரல் 7ஆம் தேதி பால்குட வைபவமும் விமர்சையாக நடைபெற உள்ளது.

First published:

Tags: Local News, Ramanathapuram