முகப்பு /ராமநாதபுரம் /

பாம்பன் தூக்குபாலம் வழியாக வரிசை கட்டி சென்ற கப்பல்கள்.. காரணம் இதுதான்..

பாம்பன் தூக்குபாலம் வழியாக வரிசை கட்டி சென்ற கப்பல்கள்.. காரணம் இதுதான்..

X
பாம்பன்

பாம்பன் தூக்குபாலம்

Pamban Bridge | இந்திய கடற்படை ரோந்து கப்பல் கொச்சியில் இருந்து அந்தமான் நோக்கியும், மிதவை கப்பலானது கொச்சியில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கியும் வரிசையாக சென்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள கடல்பாதை வழியாக வடக்கு பகுதியில் அந்தமான் தீவிற்கும், கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கும் கப்பல்கள் செல்லும். அதேபோல் வடக்கு பகுதி வழியாக மும்பை, கோவா, கேரள மாநிலம் கொச்சி ஆகிய பகுதிகளுக்கும் சரக்கு கப்பல், மிதவை கப்பல், விசைப்படகுகள் தூக்குபாலம் வழியாக செல்லும்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக குருசடை தீவின் அருகே நின்ற மிதவை கப்பல், பவர்போட் என்றழைக்கப்படும் இந்திய கடற்படை ரோந்து சொகுசு கப்பல் மற்றும் கேரளா மாநிலம் கொச்சியில் மீன்பிடி சீசனை முடித்துவிட்டு சொந்த ஊரான நாகை மாவட்டத்திற்கு திரும்பும் கப்பல் கடல்சீற்றத்தால் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து, நேற்று (பிப்ரவரி 12) காற்றின் வேகம் குறைந்து கடல் நீரோட்டமும் சீராக இருந்தது. இதனால் பாம்பன் துறைமுகம் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பாம்பன் தூக்குபாலம் திறக்கப்பட்டு முதலில் விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக படகுகள் வரிசையாக நாகப்பட்டினம் சென்றன.

பின்பு, இந்திய கடற்படை ரோந்து கப்பல் கொச்சியில் இருந்து அந்தமான் நோக்கியும், மிதவை கப்பலானது கொச்சியில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கியும் வரிசையாக சென்றது. இதனை பாம்பன் சாலை பாலத்தில் நின்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் புகைப்படங்கள் எடுத்து படகுகள் செல்வதை ரசித்து சென்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram